நாட்டில் 25 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதாக லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே லோக் சபாவில் அளித்த விளக்கம்:
பஞ்சாப் முதலிடம்
பிப்.,1 ம் தேதி கணக்கின்படி, நாடு முழுவதும் 25,00,631 முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்புத் துறையின் கீழ் ராணுவ ஓய்வூதியம் பெறுகின்றனர். இதில், அதிக ராணுவ ஓய்வூதியதாரர்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப் மாநிலம் 2,77,985 ஓய்வூதியதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அரியானா (2,71,034), உத்தர பிரதேசம் (2,24,971) ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.
1 லட்சம் நேபாளிகள்
நேபாளி குடிமக்கள் 1,07,837 பேருக்கு பாதுகாப்புத் துறையிலிருந்து ஓய்வூதியம் செல்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து நேபாளி வீரர்கள் இந்திய ராணுவத்தின் கூர்கா ரெஜிமெண்ட் பிரிவில் பணியாற்றி வருகின்றனர். குறைந்தபட்சமாக, சிக்கிம் மாநிலத்தில் 288 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.