தொலை தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை 112 கோடியாக உயர்வு!!!

 கடந்த, 2016 நவம்­ப­ரில், தொலை தொடர்பு சந்­தா­தா­ரர் எண்­ணிக்கை, 2.10 கோடி அதி­க­ரித்து, 112 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், ௧௧௦ கோடி­யாக இருந்­தது.
மதிப்­பீட்டு மாதத்­தில், மொபைல் போன் சந்­தா­தா­ரர் எண்­ணிக்கை, 108 கோடி­யி­லி­ருந்து, 110 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.இதில், ரிலை­யன்ஸ் ஜியோ மட்­டும், 1.62 கோடி சந்­தா­தா­ரர்­களை சேர்த்­துள்­ளது. இந்­நி­று­வ­னம், ‘4ஜி’ சேவையை
துவங்­கிய மூன்று மாதங்­க­ளுக்­குள், 5.19 கோடி சந்­தா­தா­ரர்­களை ஈர்த்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.
இதே காலத்­தில், ஐடியா செல்­லு­லார், 25 லட்­சம்; பார்தி ஏர்­டெல், 10 லட்­சம்; வோட­போன், 8.90 லட்­சம்; பி.எஸ்.என்.எல்., 8.31 லட்­சம்; டெலி­னார், 4.86 லட்­சம்; ஏர்­செல், 3.02 லட்­சம்; ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ், 1.56 லட்­சம்; எம்.டி.என்.எல்., 3,364 என்ற அள­வில், சந்­தா­தா­ரர்­களை இணைத்­துள்ளன.குவாட்­ரன்ட், தன் தொலைத் தொடர்பு சேவையை நிறுத்த முடிவு செய்­தி­ருப்­ப­தால், 69 ஆயி­ரம் சந்­தா­தா­ரர்­களை இழந்­துள்­ளது. சிஸ்­டமா சியாம், 2.88 லட்­சம்; டாட்டா டெலி­சர்­வீ­சஸ், 10 லட்­சம் சந்­தா­தா­ரர்­களை இழந்­துள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...