பிப்.28-ல் வங்கிகள் வேலைநிறுத்தம்!!!

  பிப்ரவரி 28-ஆம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான
நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வேண்டும், பண மில்லா பரிவர்த்தனை செய்வதை கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி பொதுத் துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், வங்கி சங்கங்களில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவித்த்துள்ளதால் 75 சதவீத வர்த்தக பணப்பரிவர்த்தை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. .

இந்த வேலைநிறுத்தப் போரட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கீழ் இயங்கும் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு பங்கேற்காது என்று தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...