கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் மடலிங்கனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நிங்கப்பா (57). விவசாயம் செய்து வந்த இவர் பிப்ரவரி 16 ஆம் தேதி இரவு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நிங்கப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம்
ஏற்படவில்லை. கடந்த 23 ஆம் ‘நிங்கப்பா உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உயிர் பிழைப்பது கஷ்டம். இன்னும் 3 மணி நேரம்தான் உயிரோடு இருப்பார்' என்று அதிர்ச்சி தகவல் சொல்லியுள்ளார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ‘நிங்கப்பாவின் ஆசைப்படி அவரது சொந்த வீட்டில்தான் உயிர் போக வேண்டும். எனவே வீட்டுக்கு கொண்டு போகிறோம் ' என கூறி மருத்துவமனையில் இருந்து கிளம்பினர். ஆம்புலன்ஸ் மூலமாக யாதகிரியில் இருந்து மடலிங்கனாலா கிராமத்துக்கு கொண்டு சென்றனர். பாதி வழியிலே நிங்கப்பாவின் உடலில் வெப்பம் குறைந்ததால் உறவினர்கள் பதறினார்கள்.
நிங்கப்பாவை பரிசோதித்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவமனையின் ஊழியர், ‘ உயிர் பிரிந்து விட்டது.அவர் இறந்துவிட்டார்' என்று சொல்லிவிட்டார். இதனால் கதறி அழுத உறவினர்கள், வீட்டுக்கு கொண்டு சென்று படுக்க வைத்தனர். நிங்கப்பா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் ஊர் மக்கள் எல்லாம் கூடி விடிய விடிய அழுது கொண்டிருந்தனர்.
அதிகாலை 3 மணியளவில் நிங்கப்பா திடீரென எழுந்து உட்கார்ந்து, 'பசிக்குது. ஆப்பிள் ஜூஸ் கொடுங்க' எனக் கேட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் அழுது கொண்டிருந்த பலர் பீதி அடைந்து சிதறி ஓடினர். இறந்ததாக கூறப்பட்டவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் அங்கு பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு யாதகிரியில் 17 வயதான குமார் என்ற இளைஞர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. சுடுகாட்டுக்கு கொண்டு சென்றபோது அவர் திடீரென எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் இறந்ததாக நினைத்து சுடுகாட்டுக்கு கொண்டு சென்று பின் நீர்மாலை எடுக்கும் போது எழுந்து உயிருடன் உட்கார்ந்தார். மருத்துவர்கள் ஒன்றுக்கு நான்கு முறை உண்மையில் ஒருவர் இறந்து விட்டாரா? என்பதை நன்கு பரிசோதித்த பின்பே உறுதிப்படுத்த வேண்டும் . ஒருவரின் நாடித்துடிப்பு, கண் அசைவு, மூச்சு, இதயத்துடிப்பு என நான்கு முக்கிய விஷயங்களை ஆராய்ந்த பிறகே ஒருவர் இறந்து விட்டதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவர்களின் அலட்சியத்தையே இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.