பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் : தேர்வுத் துறை!


பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான விடைத்தாள் குறித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் படி, விடைத்தாளில் 30 பக்கம் முதல் 38 பக்கம் வரை இருக்கும். மாணவர்கள் அதற்குள் விடை எழுத வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் பாடத்துக்கு ஏற்ப விடைத்தாள்களில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மொழிப்பாடத்தை பொறுத்தவரையில் 30 பக்கம் கோடிட்ட தாள் வழங்கப்படும். கூடுதல் தாள் தேவைப்பட்டால் கோடிட்ட தாள்தான் வழங்கப்படும். உயிரியல் மற்றும் உயிரி-உயிரியல் பாடங்களை பொறுத்தவரையில் தனித்தனியாக விடை எழுதும் வகையில் விடைத்தாள் தயாரிக்கப்படுகிறது. உயிரியலுக்கு 22 பக்கம் ஒதுக்கப்படுகிறது, உயிரி-உயிரியல் பாடத்துக்கு 26 பக்கம் ஒதுக்கப்படுகிறது. இவை ஒரே புத்தகமாக தைக்கப்பட்டு வழங்கப்படும். அந்தந்த பாடப்பிரிவு எடுத்துள்ள மாணவர்கள் தனித்தனியாக விடை எழுத வேண்டும். கணினி அறிவியல் பாடத்துக்கு ஓஎம்ஆர் தாள் வழங்கப்படும். அதில் 30 பக்கம் இடம் பெறும். கணக்குப் பதிவியல் பாடத்திற்கு 14 பக்கங்கள் வெள்ளைத்தாளும், 15ம் பக்கத்தில் இருந்து 46 பக்கம் வரை கோடிட்டும் வழங்கப்படும்.

இதர பாடங்களுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். புவியியல் பாடத்துக்கு 36 பக்கம் ஒதுக்கப்படுகிறது. வணிக கணித பாடத்துக்கு 37 பக்கங்கள் ஒதுக்கப்படுகிறது. எழுத்துகள் பெரிதாக எழுதும் போது கூடுதல் தாள் தேவைப்பட்டால் வழங்கப்படும். தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கேள்வித்தாள் A, B என இரண்டு வரிசைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...