7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா ; 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல்!!!

‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது' என நாசா அறிவித்துள்ளது.

7 புதிய கோள்கள்:



சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய மைல் கல்:

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள், அதாவது 235 டிரில்லியன் மைல்கள் தொலைவில் புதிய சூரியக்குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோள்களுக்கு, 'டிராப்பிஸ்ட் 1' என்று நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...