பிளஸ் 2 செய்முறை தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணி தீவிரம்!!

செய்முறை பொதுத்தேர்வுக்கு, பாடவாரியாக வினாத்தாள் தயாரிக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 8ம் தேதியும் துவங்குகிறது. செய்முறை
பொதுத்தேர்வுகள், வரும் 6ம் தேதி முதல், 21ம் தேதி வரை நடத்த, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 346 மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 212 நோடல் மையங்களில், இரு கட்டமாக, செய்முறை தேர்வுகள் நடக்கின்றன. இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல், இயந்திரவியல் உள்ளிட்ட, பாடங்களுக்கான செய்முறை தேர்வுகளுக்கு, வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், விறுவிறுப்பாக நடக்கின்றன.

இதுகுறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், பத்து பேர் கொண்ட சிறப்பு குழு, செய்முறை தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் பணிகளில், ஈடுபட்டு வருகின்றனர். பாடவாரியாக, செய்முறை பகுதிகளை தரம்பிரித்து, மாணவர்களின் தேர்வுக்கு எண்ணுக்கு ஏற்ப, வினாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதை, தேர்வு கண்காணிப்பு அலுவலர் வாயிலாக, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நோடல் மையங்களை ஆய்வு செய்தல், தேர்வு எண் சரி பார்க்கும் பணிகளும் நடக்கின்றன.

தேர்வுகள் முடிந்தவுடன், மதிப்பெண் பட்டியலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு, அனுப்பி வைக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...