ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!


வரும் ஏப்ரல் மாதம் முதல் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் பொருட்டு இத்தகைய அதிரடி அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் வங்கிகளில் இனி ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக
பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ இயலாது. அதேபோல, சொத்துகள் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் லட்சக்கணக்கில் ரொக்கத்தைக் கையாள முடியாது.
மின்னணு பணப் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்காகவும், கருப்புப் பணப் புழக்கத்தை வேரறுப்பதற்காவும் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். கருப்புப் பணம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு இந்தத் திட்டத்தை ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது.
தற்போது நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு, அதனை முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகப் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிப்புத் திட்டங்கள்: இதனிடையே, ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்து மின்னணு பணப் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை ஜேட்லி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பட்ஜெட் தாக்கலின்போது அவர் கூறியதாவது:
ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனையை மேம்படுத்துவது அரசின் கொள்கைத் திட்டங்களில் ஓர் அம்சமாகும். மின்னணுப் பணப் பரிவர்த்தனையில் புதியதொரு புரட்சியை தேசம் எட்டி வருகிறது. இதன் மூலம் சாமானிய மக்களின் நலன் காக்கப்படும்.
ஆதார் சுய விவரங்களின் அடிப்படையில் ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அத்தகைய வசதிகள் கொண்ட 20 லட்சம் சாதனங்களை பயன்பாட்டுக் கொண்டுவர வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது. செல்லிடப்பேசி, வங்கி அட்டைகள் இல்லாதவர்கள்கூட இந்த சாதனங்கள் வாயிலாக ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள இயலும்.
கையடக்க மின்னணு பணப் பரிவர்த்தனை: விற்பனையகங்களில் வங்கி அட்டைகள் வாயிலாக பணம் செலுத்தும் கையடக்க மின்னணுக் கருவிகளின் (பிஓஎஸ்) பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதத்துக்குள் (மார்ச்) புதிதாக 10 லட்சம் கையடக்க மின்னணு கருவிகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த நிதியாண்டுக்குள் (2017-18) மொத்தம் 2,500 கோடி மின்னணுப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார் அவர்.
இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு: ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதேவேளையில், நிதி சார்ந்த இணையவழிக் குற்றங்களும் உயர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு 32 லட்சம் வங்கி அட்டைகள் முடக்கப்பட்டதே அதற்குச் சான்று. இந்நிலையில், அத்தகைய நிதி மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நிதித் துறையின் கீழ் அவசரகால கணினிமய உதவிக் குழு ஒன்று புதிதாக அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடிக் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்து அதற்குத் தீர்வு காண்பதற்கான உதவிகளை அந்தக் குழு வழங்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்க மின்னணு கருவிகள் மீதான வரிகள் ரத்து

வங்கி அட்டைகள் மற்றும் ஆதார் விவரங்கள் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான கையடக்க மின்னணுக் கருவிகள் (பிஓஎஸ்) மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்வதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
அந்தக் கருவிகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கும் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தக் கருவிகளின் விலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
விற்பனை மையங்களில் கையடக்க மின்னணுக் கருவிகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்தால் ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனையும் அதிகரிக்கும் என்பதால் இந்தச் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...