3ல் ஒரு பங்கு மட்டுமே நிறைவேறிய அமைச்சர்களின் வாக்குறுதிகள் !!

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் அமைச்சர்கள், பார்லிமென்ட்டில் அளித்த வாக்குறுதிகளில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*வாக்குறுதிகள்:*

கடந்த, 2015 - 2016ம் ஆண்டுகளில், மத்திய அமைச்சர்கள், 1,877
வாக்குறுதிகளை பார்லிமென்ட்டில் அறிவித்துள்ளனர். இதில், 552 உறுதிமொழிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 392 உறுதிமொழிகள் கைவிடப்பட்டன; 893 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன.

*ஆலோசனை:*

பார்லிமென்ட்டில் அமைச்சர்கள் அளிக்கும் உறுதிமொழிகளை நிறைவேற்றுவது குறித்து, அந்தந்த அமைச்சகங்கள் ஆய்வு செய்யும். அதில் நிறைவேற்றப்படக் கூடிய உறுதிமொழிகள் மீது, மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர்கள் அறிவிக்கும் உறுதி மொழிகள் மீதான நடவடிக்கைகள் குறித்து, தொடர்புடைய அமைச்சக அதிகாரிகளுடன், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள், அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

*மூன்றில் ஒரு பங்கு:*

இதைத் தவிர, ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் என, 15 எம்.பி.,க்களை உறுப்பினர்களாக வைத்துள்ள பார்லிமென்ட் நிலைக் குழுவும், இந்த உறுதிமொழிகள் குறித்து ஆய்வு செய்கிறது. தொடர்புடைய அதிகாரிகளுடன், நிலைக்குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளில், மூன்றில் ஒரு பங்கு நிறைவேற்றப்பட்டுள்ளதாக, பார்லிமென்ட் விவகாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...