சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதன் எதிரொலி: உள்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் !!

 தமிழக முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சரை இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக ஆளுநர் பதிவியை கூடுதலாக கவனிக்கும் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக உதகை

சென்றிருந்தார். நாளை வரை அங்கு தங்கியிருக்க திட்டமிட்டிருந்த ராவ், நேற்று மாலையே பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார்.
மத்திய அரசின் அழைப்பின் பேரிழையே புறப்பட்டு சென்றதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என தெரிகிறது. இதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை வருவார் என கூறப்பட்ட நிலையில், திடீரென டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...