சமூக வலைத்தளங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகுகிறது; ஒரே நாளில் 5 லட்சம் பேர் ‘மிஸ்டு கால்’ கொடுத்தனர்!!

நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் பேர் ‘மிஸ்டு கால்’ மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

‘மிஸ்டு கால்’ மூலம் ஆதரவு
முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு திரட்டும் பணியில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தகவல் தொடர்பு அணி செயலாளர் ராமச்சந்திரன்
தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருகட்டமாக 9289222028 என்ற தொலைபேசி எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான 2 நாட்களில் 35 லட்சத்துக்கும் அதிகமான மிஸ்டு கால்கள் வந்தன.

தனக்கு ‘மிஸ்டு கால்’ மூலம் ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் குரல் பதிவு (வாய்ஸ் கால்) அனுப்பப்படுகிறது. அதில், ‘நான் ஓ.பி.எஸ். பேசுகிறேன். மிஸ்டு கால் மூலம் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. புரட்சி தலைவி அம்மா வழியில் மக்களுக்கு பணியாற்ற ஆதரவு அளித்துள்ளீர்கள். அம்மா வழியில் மக்கள் பணி தொடரும்’ என்று தெரிவிக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்தும்....
இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் ‘மிஸ்டு கால்’ கொடுத்தனர். தமிழகம் மட்டுமன்றி, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மராட்டியம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் ‘மிஸ்டு கால்’ மூலம் தங்கள் ஆதரவை பதிவு செய்தனர்.

ஒரே நாளில் 5 லட்சம் பேர்
ஒரே நேரத்தில் அதிகமான அழைப்புகள் வந்ததால், அந்த எண்ணிற்கான ‘சர்வர்’ சிறிது நேரம் முடங்கியது. உடனடியாக தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அதனை சரிசெய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து 5 லட்சத்துக்கும் அதிகமான மிஸ்டு கால்கள் பதிவாகி உள்ளன.

இதுதவிர ‘பேஸ்புக்’ (முகநூல்), ‘வாட்ஸ்–அப்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களிலும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...