9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை–
9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘தட்டம்மை–ரூபெல்லா’ தடுப்பூசி வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷன் அறிவித்துள்ளது. இதற்காக சென்னையில் வருகிற 6–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
6–ந்தேதி முதல்...
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது:–
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தட்டம்மை–ரூபெல்லா நோயினை முற்றிலும் ஒழிப்பதற்காக வருகிற 6–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தாலும் கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும்.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் காலை 8 மணி வரை மாலை 4 மணிவரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
இதன் மூலம் மொத்தம் 16.3 லட்சம்’ குழந்தைகள் பயன் அடைவார்கள்.
வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு
இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் தட்டமை மற்றும் ரூபெல்லா நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் கூட பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பது தடுக்கப்படுகிறது.
இந்த முகாம் முதல் இரண்டு வாரத்தில் அனைத்து பள்ளிகளிலும், மூன்றாம் வாரத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களிலும் நடைபெறவுள்ளது.
இறுதியாக நான்காவது வாரத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.