"ரூபெல்லா' தடுப்பூசி போட்டு கொள்ள...பயப்படாதீங்க! "வதந்திகளை நம்பாதீங்க' என, அறிவிப்பு !!

 "உங்கள் குழந்தைகளை காக்கவே "ரூபெல்லா' , தட்டமை தடுப்பூசி போடப்படுகிறது; தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்,' என, சுகாதார மற்றும் மருத்துவத்

துறையினர் தெரிவித்துள்ளனர்.




குழந்தைகளுக்கு, தட்டமை (மணல் வாரி அம்மை), "ரூபெல்லா' நோய் தடுக்கும் முயற்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மும்முரமாக
இறங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரியை தேர்வு செய்து, மாநிலத்தில் வசிக்கும் ஒன்பது முதல், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியை மருத்துவம் மற்றும் சுகாதார நலத்துறை மூலம் பாதுகாப்பாக செலுத்தவுள்ளது.




மாநிலம் முழுவதும் வரும், 6ம் தேதியிலிருந்து முதல்கட்ட தடுப்பூசி முகாம், பள்ளிகளில் துவங்குகிறது. முதல் வாரத்தில், பள்ளிகளில் மட்டும் தடுப்பூசி முகாம் நடக்கும். இரண்டாவது, மூன்றாவது வாரங்களில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.விடுபட்ட குழந்தைகளுக்கு, நான்காவது வாரத்தில், அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி போடப்படும். முகாம், 28ல் நிறைவடைகிறது.




திருப்பூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், குழந்தைகள் ஆசிரமம், கல்வி நிலையங்கள், குழந்தைகள் காப்பகங்களில் உள்ள, ஆறு

லட்சத்து, 31 ஆயிரத்து, 454 குழந்தைகளுக்கு தட்டம்மை "ரூபெல்லா' தடுப்பூசி போட, மாவட்ட நிர்வாகம், விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.




குழப்பம் வேண்டாம்

"மேற்கண்ட தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளும் குழந்தைகளுக்கு போடுகின்றன. ஆனால், ஒரு தடுப்பூசியின் விலை ஆயிரம் முதல், 1,500 ரூபாய் என்பதால், பலரும் அவசியமற்றது என நினைக்கின்றனர். இதனால், வருங்காலத்தில் தட்டம்மை பாதிப்பு தலை தூக்க வாய்ப்பு இருப்பதை அறிந்து இப்போதே, குழந்தைகளை காக்கும் முயற்சி துவங்கப்பட்டுள்ளது.




தங்கள் மருத்துவம் மற்றும் மருந்துகள் தேடி வருவோர் எண்ணிக்கை இதனால், குறைய வாய்ப்புள்ளதாக எண்ணும் சிலர், சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இது குறித்து, அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது; சம்மந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சொட்டு மருந்தை போன்றே, அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியை தங்கள் குழந்தைகள் போட்டுக் கொள்ள மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்று, மருத்துவத்துறை சார்பில், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.




பிரச்னை வராது

இது குறித்து மாநகர நகர் நல அலுவலர் பூபதி கூறுகையில்,""திருப்பூரில், ஒன்பது முதல், 15 வயதுடைய குழந்தைகள், 2.20 லட்சம், என கண்டறியப்பட்டுள்ளது.இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில், 47 பேர் டாக்டர், சுகாதார செவிலியர் உட்பட, 400 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 14 வயது குழந்தைக்கு ரூபெல்லா பாதிப்பு இருந்தால், அப்பெண் திருமணம் முடிந்து கர்ப்பம் தரிக்கும் போது, கருவிலிருக்கும் குழந்தைக்கும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேற்கண்ட தடுப்பூசிகள் குறித்து பரவி வரும் தகவல்கள் தவறானவை. தடுப்பூசி போட சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் தடுப்பூசி பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். எந்த பிரச்னையும் வராது. பெற்றோர் பயப்பட வேண்டாம். மறக்காமல், தங்கள் குழந்தைகளுக்கு, ரூபெல்லா, தட்டமைப்பு தடுப்பூசிகளை போட்டு கொள்ளுங்கள்,'' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...