நிதி ஒதுக்கீடு குறைந்ததன் காரணமாக மத்திய அரசின் மகப்பேறு சலுகை திட்டத்தின் கீழ் முதல் குழந்தைக்கு மட்டுமே நிதியுதவி கிடைக்கும் எனத் தெரிகிறது.
புத்தாண்டுப் பிறப்பையொட்டி கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி சில திட்டங்களை அறிவித்தார்.
அதில், "கடந்த 2010-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திரா காந்தி தாய்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 56 மாவட்டங்களில்
கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இனி, இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில் ரூ. 6,000 (மாதம் ரூ. 1,000 வீதம் 6 மாதங்களுக்கு) வழங்கப்படும்' என மோடி அறிவித்தார்.
மேலும், இந்தத் திட்டம் முதல் இரண்டு குழந்தைகளுக்குப் பொருந்தும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 12,661 கோடி தேவைப்படும் என்றும், இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 7,932 கோடி என்றும் மத்திய குழந்தைகள், பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 2,700 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், 2017-18 நிதியாண்டில் மகப்பேறு சலுகை திட்டத்தின் கீழ் முதல் குழந்தைக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.