தமிழக அரசியல் சூழல்: மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை !!

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தாக்கப்பட்டது குறித்து, மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது, கடந்த 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள், ரகசிய
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர் இதை ஏற்க மறுத்ததால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதை தொடர்ந்து 2 முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபையில் நடந்த அமளியைth தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். ஆனால், திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற மறுத்து சட்டசபை கூட்ட அரங்கிற்குள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான அவை காவலர்கள் கூட்ட அரங்கிற்குள் புகுந்து திமுக எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிச்சாமி 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டசபையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மீது சபைக்காவலர்கள் நடத்திய தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில், சட்டசபை நிகழ்வுகள் குறித்தும், எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றது தொடர்பாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆளுநருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் சட்டசபையில் நடந்த நிகழ்வு மற்றும் எதிர்க்கட்சியினர் தாக்கப்பட்டது குறித்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது மற்றும் சட்டசபையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசின் உள்துறை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...