அண்ணாமலை பல்கலை: தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து!

கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் தொலைதூரக்கல்வி போன்றவற்றை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மாநில அளவிலும் தேசிய அளவிலும் வழங்கி வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செயல்பாடுகளுக்கென ஷார்ஜா,
மஸ்கட், துபாய் மற்றும் டொரண்டோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் கல்வி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று கொண்டுவந்தார்.

அந்த மசோதாவில், ‘கடந்த 2012ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம் செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொலைதூரக் கல்விமுறை மூலமாக பயிலும் படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்துவதற்கும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது இந்தியாவுக்கு வெளியேயும் கல்வி பயில்வதற்கான மையங்களை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தையும் பல்கலைக்கழகத்துக்கு அளிக்க அந்த சட்டத்திருத்தம் வகை செய்திருந்தது.

இந்நிலையில், தொலைதூரக் கல்விமுறை மூலமாக பயிலும் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது என 2012இல் முடிவுசெய்து அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கம் செய்திருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும்வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது’ என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...