மாணவர்களின் போராட்டத்தை இழிவுபடுத்திப் பேசிய ராதா ராஜன் மீதான அவதூறு வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் இயற்றக்கோரி லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழ் உணர்வோடு
போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அமெரிக்கத் தொண்டு நிறுவனமான பீட்டாவின் ஆதரவாளர் ராதா ராஜன், ‘ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல், இலவச உடலுறவு என்று சொன்னால்கூட மெரினாவில் 50,000 பேர் கூடுவார்கள்’ என்று, தமிழ் இளைஞர்களை கொச்சைப்படுத்திப் பேசினார்.
அவருடைய சர்ச்சையான பேச்சு, தமிழ்நாட்டு மக்களை கொந்தளிக்கவைத்தது. இந்நிலையில், ராதா ராஜன் மீது பெண்களை ஆபாசமாகப் பேசுதல், பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கூறியிருந்தனர்.
மேலும் அவர் மாணவர்களிடையே மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இதையடுத்து அவர், 'தனது கருத்துகள் தமிழக மக்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன். நான் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது ஒரு உதாரணத்துக்கு இப்படி பதில் கூறினேன். மாறாக, மக்களின் மனதை காயப்படுத்துவது என்னுடைய நோக்கமல்ல. என் வார்த்தைகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி ராதா ராஜன் மீது வழக்கறிஞர் ராஜ்சேகர், தடா ரஹீம் உள்ளிட்டோர் புகாரளித்தனர்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கத்தினரும் அவர்மீது வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து பெண் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி நளினி, ‘ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழ் உணர்வோடு பல மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் நாங்களும் கலந்து கொண்டோம். இதுகுறித்து ராதராஜன் பேட்டியளித்தது பெண்மையை கேவலப்படுத்தும்விதமாக உள்ளது. எனவே, அவர்மீது அவதூறு வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளோம்’ என்று கூறினார். இந்த வழக்கு, இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரன், ராதா ராஜன் பேச்சு குறித்த உரிய ஆதாரங்கள் இருக்குமாயின் இவ்வழக்கு பிப்ரவரி 13ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.