பிரிட்டனில் பணி புரியும் வெளிநாட்டினரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, அந்நாட்டு அரசு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
*முதலிடம்:*
இதுகுறித்து, பிரிட்டன் உள்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில், வெளிநாட்டினர், 93 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இவர்களில், 53 ஆயிரம் பேருடன், இந்தியர்கள் முதலிடத்திலும்;
9,348 பேருடன், அமெரிக்கர்கள் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
தொழில்முறை விசா பெற்று வருவோரில், 50 சதவீதத்திற்கும் மேல் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில், 42 சதவீதத்தினர் மென்பொருள் பொறியாளர்கள்; 19 சதவீதம், அறிவியல் மற்றும் இதர துறைகளை சேர்ந்த நிபுணர்கள்; 12 சதவீதத்தினர் காப்பீட்டு துறையை சேர்ந்தவர்கள்.
*அதிகம்:*
கடந்த ஆண்டு, பிரிட்டன் அரசு, 56,058 விசாக்களை வழங்கியது. இந்தியர்களுக்கு மட்டும், 30,556 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, 2010ம் ஆண்டை விட அதிகம். அதே போல், பிரிட்டன் வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.