தமிழகத்தில் நீண்டகாலமாக காவல் துறையில் சட்ட, ஒழுங்கு டி.ஜி.பி, பணி காலியாகதான் இருந்துவருகிறது. அந்தப் பணியில் கூடுதல் பொறுப்பாகதான் கவனித்துவருகிறார்கள். தற்போது உளவுத்துறை டி.ஜி.பியாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன்தான் சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.பதவியையும் கூடுதலாக கவனித்து வருகிறார்,
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பதவியேற்றதும், சட்ட ஒழுங்கு பிரிவுக்கு புதிய டி.ஜி.பி,யாக நியமிக்க முதல்வருடன் ஆலோசனை செய்துவருகிறார் என்று முன்னவே நமது மின்னம்பலம்.காம் மொபைல் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தோம். டிஜி.பி பதவிக்கு சென்னை சிட்டி கமிஷனர் ஜார்ஜ், புட்செல் டிஜிபி ராதாகிருஷ்ணன் இருவரும்தான் கடுமையான போட்டியில் இருந்துவருகிறார்கள் என்ற செய்தியையும் மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
தற்போது ஜார்ஜ்-ன் தீவிர முயற்சியால் சட்ட ஒழுங்கு டிஜிபி,யாக, கோப்பு ஒன்று கையெழுத்துக்கு காத்திருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் டிஜிபி, திரிபாதி ஓரிரு மாதத்தில் டிஜிபி-யாகிறார், அதனால் சிட்டி கமிஷனராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாம். ஜாங்கிட் சி.பி.சி.ஐ.டி, பிரிவுக்கும் என அதிகாரிகள் மாற்றம் இன்று வெளிவருவதாக சொல்கிறார்கள் டிஜிபி வட்டார அதிகாரிகள்.