இன்று உலக தாய்மொழிகள் தினம்!

ஆண்டுதோறும் பிப்-21 ஆம் தேதி உலக தாய்மொழிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1952 பிப்ரவரி 21 ஆம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்கா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில்
பலியான மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பு 1999 ஆம் ஆண்டு உலக தாய்மொழிதினத்தை உருவாக்கியது.

கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையாக வசித்து வந்த வங்காளிகள், வங்க மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.அப்போது டாக்கா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்கள், இந்த போராட்டத்தை நடத்தினர். தாய்மொழியை காப்பதற்காக போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் மீது பாகிஸ்தான் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அதன்படி உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் சுமார் 6000 மொழிகளுக்கு மேல்பேசப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 3000த்துக்கும் குறைவாகவே பேசப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 74 சதவீத மக்கள் இந்திய ஐரோப்பிய மொழிகளையும் 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக 22 மொழிகள் மட்டுமே உள்ளது.

தற்போதைய மக்கள் வேலை நிமித்தம் காரணமாக பல்வேறு மொழிகளை கற்க தொடங்குகின்றனர். முக்கியமாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளை கற்று வருகின்றனர். இந்த நிலையில் தாய் மொழியில் பேச மறுக்கின்றனர். இதிலும் பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசுவது நாகரிகம் எனக் கருதுகின்றனர். .

எனவே உலக மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளை அழிக்காமல் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகர்கள் இன்று பல்வேறு நாடுகளில் குடியேறி சாதனை படைத்து வருகின்றனர். .தமிழர்கள் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளுக்கு செல்ல பல மொழிகளை கற்றாலும், நம் அடையாளத்தையும். பாரம்பரியத்தையும் காப்பதற்காக தாய்மொழியான தமிழில் கல்வி கற்று, தமிழகத்தில் அனைவரிடமும் தமிழிலேயே பேசுவோம் என்பதை இத்தினத்தில் நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...