புதுச்சேரி அரசில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்நிலை எழுத்தர்களுக்கு கோரிமேடு அன்னை தெரசா சுகாதார அறிவியல் நிலையத்தில் சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா நேற்று காலை நடந்தது.
விழாவிற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி பயிற்சி பெற்றவர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அடிப்படை விதிகளை...
பணியின் அடிப்படை விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கத்தை மீறி செயல்படக்கூடாது. மக்களுக்கு சேவையாற்றி சட்டங்களுக்கு வளைந்து கொடுத்து செயல்படலாம். ஆனால் சட்டத்தை மீறி செயல்படக்கூடாது. ஒவ்வொரு கோப்பின் பின்னாலும் மக்களின் வாழ்க்கை உள்ளது என நினைத்து செயல்பட வேண்டும்.
மேல்நிலை எழுத்தர் பதவிக்கு தேர்வு பெற்று வந்துள்ளவர்கள் யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு தங்களை தயார் செய்து வந்தவர்கள். இதன் மூலம் அதிக தகுதியான நபர்கள் கிடைத்துள்ளர்கள். உங்களுடைய பணி தரமானதாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கோப்புகளை தாமதப்படுத்தக்கூடாது
புதுச்சேரி பட்ஜெட்டில் 60 சதவீதம் வரையே மாநில அரசின் வருவாயாக உள்ளது. அதே சமயம் அரசின் செலவு அதிகரித்து வருகிறது. திட்டமில்லா செலவும் அதிகரித்து வருகிறது. எப்படி புதுச்சேரியின் பொருளாதாரத்தை உயர்த்துவது என சிந்தித்து செயல்பட வேண்டும்.
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு சென்று விடுவதையும், அழைத்து வருவதையும் செய்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும். உங்கள் மேஜைக்கு வரும் கோப்புகளை தாமதப்படுத்தக்கூடாது. விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
விழாவில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, அரசு செயலாளர் சுந்தரவடிவேலு உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.