சசிகலாவுக்கு, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த ஜெ., இல்லம் நினைவு இல்லமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
*பாதுகாப்பு வாபஸ்:*
சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, அவரது அண்ணி இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை
தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனால், போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த, முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீசார் உட்பட, 600 பேர் திரும்ப பெறப்பட்டு உள்ளனர். தற்போது குறைந்த அளவிலான போலீசாரே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
*நினைவு இல்லமாகுமா?*
இந்நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் கூறியதாவது: ஜெ., இல்லத்தை ஆக்கிரமித்து இருந்த, சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களையும், அவர்களின் சொந்தங்களையும், அரசு உடனே வெளியேற்ற வேண்டும். 1.65 கோடி தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, ஜெ., வாழ்ந்த இல்லத்தை, நினைவு இல்லமாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.