ஓபிஎஸ் ராஜினாமாவை ஆளுநர் ஏற்பதில் சிக்கல் !!

*இதுகுறித்து வெளியான பரபரப்பு தகவல்*

*முதல்வர் பன்னீர்செல்வம் கொடுத்த ராஜினாமா செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது*


*பன்னீர்செல்வம், ராஜினாமா கடிதம் கொடுத்த நாளில், ஆளுநர் மும்பையில் இருந்துள்ளார். முதல்வரின் ராஜினாமா கடிதத்தை, 'பேக்ஸ்' அனுப்பி விட்டு ஒரிஜினலை சசிகலா தரப்பினர் கவர்னர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்*

*பின்னர், ஊட்டி ராஜ்பவனுக்கு வந்த ஆளுநரை தொடர்பு கொண்டு ராஜினாமா தகவலை தெரிவித்துள்ளனர்*

*பின், அவரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வேண்டும் என, அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவரும், அங்கிருந்தபடியே ராஜினாமா ஏற்பு கடிதம் வழங்க, ஆளுநரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனாவுக்கு உத்தரவிட்டுள்ளார்*

*இந்நிலையில், சென்னைக்கு வந்த ஆளுநர், சீலிட்ட கவரில் இருந்த ராஜினாமா கடிதத்தை பிரித்து பார்த்த போது, அதில், பன்னீர்செல்வத்தின் கையெழுத்தில் மாற்றம் இருந்துள்ளது. அதாவது, கையெழுத்தின் அருகே பிற்பகல் 1:41 மணி என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளத*.

*இந்நிலையில், தன் கையெழுத்துடன், நேரம் குறிப்பிடும் பழக்கம் இல்லை என்பதால், ராஜினாமா கடிதமாக, அதை ஏற்கக்கூடாது என பன்னீர்செல்வம் தரப்பில் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது*

*அதேபோல், இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வர், தன் ராஜினாமா கடிதத்தை, ஆளுநரை நேரில் சந்தித்து தந்தால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விதி உள்ளது. அதனால், பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதமே செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...