தனி மாவட்டமாகிறது இடைப்பாடி:முதல்வர் பழனிசாமி திட்டம் ??

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சில தாலுகாக்களை இணைத்து, இடைப்பாடியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க, அரசு திட்டமிட்டுள்ள தாக வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில், 32 மாவட்டங்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தில், ஒன்பது
தாலுகாக்கள் உள்ளன. தற்போதைய முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா, சிலுவம்பாளையத்தைச் சேர்ந்தவர்.

இவர், 2011 அ.தி.மு.க.,ஆட்சியில், நெடுஞ் சாலை,சிறு துறைமுகங்கள் துறை
அமைச்சராக பொறுப்பேற்றார். சேலம் நெடுஞ் சாலை துறை கோட்டத்தைப் பிரித்து, இடைப்பாடி கோட்டத்தை உருவாக்கினார். மேட்டூர் மின் வினி யோக வட்டத்தில் இருந்த, இடைப்பாடி உபகோட்டத் தைப் பிரித்து, இடைப்பாடியை, தனி கோட்டமாக உருவாக்கினார்.

தற்போது, இவர் முதல்வராக உள்ளதால், சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தன் சொந்த ஊரான இடைப்பாடியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.



வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:




சேலம் மாவட்டத்தில், இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலுார் ஆகிய தாலுகாக்கள், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்தாலுகா மற்றும் பள்ளி பாளையம் ஆகிய பகுதிகளை இணைத்து, புதிதாக, இடைப்பாடி மாவட்டம் உருவாக்குவது தொடர்பாக, முதல் கட்ட ஆய்வை துவக்க, வாய் மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலுார் மாவட்டத்தில் இருந்து, அரியலுாரைப் பிரித்து, தனி மாவட்டமாக அறிவித்தது போல், ஆய்வு முடிந்த பின், இடைப்பாடி மாவட்டம் உருவாக வாய்ப்பு உள்ளது.

இடைப் பாடி மாவட்டம் உருவானால், அது தமிழகத் தின், 33வது மாவட்டமாக இருக்கும். அது போல், சேலம் மாவட்டத்தில் புதிய தாலுகாக்கள், சில பேரூராட்சிகளை, நகராட்சி யாக மாற்றுவதற் கான திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...