அதிகாரிகள் மது குடிக்க தடை!

பீகாரில் அரசு அதிகாரிகள் மதுபானங்கள் அருந்தக் கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பீகார் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1976 மற்றும் பீகார் நீதித்துறை அதிகாரிகள் நடத்தை விதிகள் 2017 ஆகிய இரண்டு சட்டத்துக்கும் முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி அரசு ஊழியர்கள் மாநிலத்தின் எந்தவொரு இடத்திலும் மது அருந்தக் கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டது.

இதற்கு முன் 1976 விதிகளின் படி வேலைபார்க்கும் இடத்தில் மட்டுமே அதிகாரிகள் மதுபானங்கள் அருந்தக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புதிய மது சட்டம், 2016 படி பீகாரில் எந்த ஒரு இடத்திலும் அரசு அதிகாரிகள் மது அருந்தக் கூடாது என அமைச்சரவையில் கூறப்பட்டுள்ளது என்று முதன்மைச் செயலர் அமைச்சரவை ஒருங்கிணைப்பு துறை அதிகாரி பிரஜேஷ் மெஹ்ரோட்ரா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

முன்னதாக பீகார் மாநிலத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. பூரண மது விலக்கை கொண்டு வர கடும் தண்டனை சட்டங்களும் கொண்டு வரப்பட்டது. எனவே அந்த தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...