கூவத்தூரில் நடவடிக்கை எடுத்த போலீசாரின் பெயர் பட்டியலை, புதியதாக பதவியேற்றுள்ள அரசு தயாரித்து வருவதால், விடுதிக்குள் சென்று நடவடிக்கை எடுத்த போலீசார் பீதியடைந்துள்ளனர்.
தமிழக முதல்வராக தேர்வு செய்வதற்கு அழைப்பு விடுக்கும்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்தும், பன்னீர்செல்வம் தரப்பில் இருந்தும்
தொடர்ந்து ஆளுநரை இருதரப்பினரும் சந்தித்து வந்தனர். இந்நிலையில், தற்போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பன்னீரின் முயற்சி எப்படி தோல்வியடைந்தது என்பது குறித்து விசாரிக்கையில், சசிகலா தரப்பில் இருந்து மேலும் 1௦ எம்.எல்.ஏ.க்கள் வருவதாக இருந்தது திடீரென வரவில்லை. அதையடுத்து, அங்கிருந்து அவர்களை வரவழைக்கும் முயற்சியாக போலீஸ் மூலம் முயற்சி செய்யப்பட்டது. அப்படியும் அங்கிருந்து ஆட்கள் வராததால் அடுத்தக்கட்ட முயற்சி செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ,க்களை ரிசார்ட்டிலிருந்து வெளியேற்ற காவல்துறையினர் முயற்சி செய்தனர். காவல்துறையினர் ரிசார்ட்டின் உள்ளே சென்று அறைகளை சோதனையிட்டனர், ரிசார்ட்டில் இருப்பவர்கள் யார், யார் என்று விசாரித்து சந்தேகம் உள்ள சிலரை ரிசார்ட்டிலிருந்து வெளியேற்றினார்கள். அப்போது காவல்துறையினருக்கும் அங்குள்ள அமைச்சர்கள்,மற்றும் எம்.எல்.ஏ,களுக்கும் சிறு மோதல் ஏற்பட்டது. அதனால் காவல்துறையினரால் எம்.எல்.ஏ,க்களை கட்டாயப்படுத்தி அப்புறபடுத்தமுடியவில்லை.
பிரச்னைக்கு தீர்வுகான, அவசரமாக ரிசார்ட்டிலே எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தை கூட்டி, சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தேர்வு செய்தார். பின்னர் பழனிச்சாமியை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்திக்க அனுப்பினார். ஆளுநர் ஆதரவு கடிதத்தை பெற்றுக்கொண்டு, ஒற்றை வரியில் சொல்கிறேன் என்று அனுப்பிவைத்தார்.
பன்னீர் செல்வமோ எம்.எல்.ஏ,க்களை வெளியில் சுதந்திரமாக வெளியில்விட்டால் எனக்குதான் அதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். பன்னீர் செல்வத்தை திருப்திபடுத்தவும், முதல்வராக பாஜக தீவிரமாக முயற்சித்து வருவதாக வெளிப்படையாகவே அரசியல் கட்சியினர் பேசுகிறார்கள்.
பன்னீரின் எதிர்பார்ப்பின்படி, ரிசார்ட்டில் ஒன்றாக கூடியிருக்கும் எம்.எல்.ஏ,க்களை வெளியேற்ற காவல் துறை பலவழிகளில் முயற்சி செய்தது என்பது எடப்பாடி பழனிச்சாமியின் குற்றசாட்டு, அவரது குற்றசாட்டுகளை நிரூபிக்கும் வகையில், பன்னீர் அணியில் உள்ள சரவணன் எம்.எல்.ஏ,விடம், ஒரு புகார் கடிதத்தையும் தயாராக வாங்கிவைத்திருந்தது காவல்துறை. அதனை வைத்து வழக்கு பதிவுசெய்து பிப்ரவரி 15-ஆம் தேதியும் காவல் துறை மிரட்டியது.ஆனால் ரிசார்ட்டில் திவாகர் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ,க்கள் , அமைச்சர்கள் , மற்றும் எம்.பி,க்கள், ஆட்சி அமைக்க எங்களை ஆளுநர் அழைக்கும் வரையில் இங்குதான் இருப்போம் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டதால், பிப்ரவரி 15ந் தேதி மாலை 4.30 மணிக்கு ஐ.ஜி, செந்தாமரைகண்ணன் அங்கிருந்து கிளம்பிவிட்டார். போலீசார் எவ்வளவோ முயற்சி செய்தும் அங்கிருந்த எம்.எல்.ஏ,க்களை வெளியேற்ற முடியவில்லை. இதன் காரணமாக பன்னீர்செல்வம் போட்டத் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், கூவத்தூர் விடுதிக்குள் நுழைந்து விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியலை தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசு தயாரித்து வருகிறது. அந்த பட்டியலில் யார், யார் பெயரெல்லாம் இருக்கிறதோ அவர்கள்மீது நடவடிக்கை இருக்கும் என்பதால் விடுதிக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரிகள் பீதியில் உறைந்துள்ளனர்.