'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆதார் புகைப்படம் எடுக்க பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றால், ஓராண்டு சிறை தண்டனை அல்லது, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எல்காட் மற்றும் அரசு கேபிள் நிறுவனம் மூலம், இலவசமாக மட்டுமே ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பொதுமக்களிடமிருந்து பணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டி அரசு துவக்கப்பள்ளியில், சிறப்பு ஆதார் முகாமில், ஆதார் புகைப்படம் எடுக்கும் ஊத்தங்கரை தாலுகா, கெங்கைபிராம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர், பணம் பெற்றுக்கொண்டு, புகைப்படம் எடுப்பதாக புகார் வந்தது.
இதையடுத்து, வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., மூலம் ஆதார் புகைப்படம் எடுக்கும் உபகரணங்களை பறிமுதல் செய்து, மேற்படி நபரின் ஆதார் புகைப்படம் எடுக்கும் அங்கீகாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆதார் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்டுள்ள நபர்கள், புகைப்படம் எடுக்க பொதுமக்களிடமிருந்து பணம் எதுவும் வசூலிக்கக்கூடாது.
மீறி வசூலித்தால், ஓராண்டு சிறைதண்டணை அல்லது, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். *பணம் கேட்கும் நபர்கள் பற்றி புகார் அளிக்க, 043431077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைக்கலாம்.* இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.