கருத்து கணிப்பு வெளியிட்டதால் எஃப்.ஐ.ஆர் !

முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த உத்திர பிரதேசத்தில் கருத்து கணிப்பு வெளியிட்ட பத்திரிக்கை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வலியுறுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய காரணமாக தைனிக் ஜாக்ரன் பத்திரிக்கை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
செய்யச் சொல்லி உத்திர பிரதேசத்தின் பதினைந்து மாவட்டத்தில் இருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். உத்திர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை சட்டசபையின் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடட் நிர்வாகத்தின் இயக்குனர் மற்றும் தைனிக் ஜாக்ரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126 A மற்றும் B ஆகியவற்றின் கீழ், ஊடக நிறுவனங்கள் மக்கள் மீது தாக்கம் உண்டாக்கும்படியான கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது தவறு,இதற்கு சிறை தண்டனை அளிக்கப்படும்.தைனிக் ஜாக்ரன் இப்படி கருத்து கணிப்பு வெளியிட்டிருப்பது நிச்சயமாக விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.தைனிக் ஜாக்ரன் பத்திரிக்கையில் முதல் கட்ட தேர்தல் முடிவின் இறுதியில் பாஜக முன்னிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. மார்ச் மாதம் எட்டாம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் முடிவிற்கு வரும் வரை கருத்து கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...