சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைச்சர் நிலோபர் கபிலுக்கு, கண்ணீர் அஞ்சலி என்ற தலைப்பில், துண்டு பிரசுரம், வாணியம்பாடியில் வீடு, வீடாக கொடுத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி, மானம் உள்ள தமிழ் மக்கள் சார்பில், நேற்று காலை 9:00 மணியில் இருந்து, வீடு, வீடாக சென்று அமைச்சர் நிலோபர் கபிலுக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்தும் துண்டு பிரசுரத்தை கொடுத்து வருகின்றனர்.
அதில் கூறியிருப்பது: கண்ணீர் அஞ்சலி. திருமதி நீலோபர் கபில், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின் வேலைக்காரனுக்கு ஆதரவாக வாக்களித்ததால், தொகுதி மக்கள் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை கோபத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இனி இவர் தொகுதி பக்கம் வந்தால், செருப்பு மற்றும் துடைப்பம் கொண்டு தக்க பாடம் கற்பிக்கப்படும். இப்படிக்கு வாணியம்பாடி தொகுதி மானம் உள்ள தமிழ் மக்கள் என, குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் இந்த கண்ணீர் அஞ்சலி தகவல், வாட்ஸ் ஆப்பிலும் உலா வருகிறது.
இதே போல் கடலூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ. சம்பத்திற்கு தொகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவர் சசிகலா தரப்பிடம் விலைபோனதால் அகால மரணமடைந்துவிட்டார் என்று கடலூர் மாவட்ட இளைஞர்கள் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் செய்தியை பரப்பி வருகிறார்கள். அதே போல் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பொது மக்களோடு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகளும் கைகோர்த்துக்கொள்ள இவர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதே போல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி அவர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளார்கள். இதனால் மிரண்டு போன மாரியப்பன் உடனே சென்னைக்கு திரும்பியிருக்கிறார். மேலும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகத்திற்கு எதிராக மக்கள் திரண்டு அவர் இல்லத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.