நாட்டில் திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்க்க அரசு பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும்,திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவதால்,ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேச
மாநிலங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தில் கழிப்பறை வசதி இல்லாத வீட்டாருக்கு தங்களது பெண்களை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
குர்கானில் இருந்து 100கி.மீ தொலைவில் உள்ள புனஹனா பகுதி. அந்த பகுதியில் உள்ள திவாரா கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,200 பேர் கலந்துக் கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட உலேமாஸ் மற்றும் மவுலானாஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமையில் பஞ்சாயத்து நடந்தது. சுமார் மூன்று மணிநேரம் நடந்த கூட்டத்தில்,கழிப்பறை வசதி இல்லாத வீட்டாருக்கு தங்களது பெண்களை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என முடிவு எடுக்கப்பட்டது. மேலும்,திருமணத்தின்போது,இசை நிகழ்ச்சிகளுக்கும்,மது அருந்துதலுக்கும் பஞ்சாயத்தார் தடை விதித்தனர்.
திறந்தவெளியை கழிப்பிடங்களாக பயன்படுத்துவது சுகாதாரமற்றது. மேலும், அது பெண்களுக்கு எதிரான ஒரு குற்றமாகும். வீட்டில் கழிப்பறை இல்லாததால்,பெண்கள் இரவு வேளைகளில் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் பல்வேறு வன்முறைக்கு ஆளாகின்றனர். எனவே, கழிப்பறை வசதியை ஏற்படுத்தும் வரை,மணமகனுக்கு மணமகள் கிடைக்கமாட்டார்கள். மேலும்,பெண் வீட்டுக்கு போகும்போது,மாப்பிள்ளை வீட்டாரில் யாராவது மது அருந்தியிருந்தால்,அந்த திருமணத்தை குவாஸி(முஸ்லீம் சமுதாயத்தின் ஒரு நீதிபதி) நடத்தி வைக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும்,திருமண செலவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என திவாரா கிராமத்தைச் சேர்ந்த யஷ்யா கரிமி தெரிவித்துள்ளார்.
இதில்,குழந்தைகளின் கல்வி குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.குழந்தைகளுக்கு உயர்தர கல்வி அளிக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.கழிவறை இல்லையெனில்,மணமகள் இல்லை என்ற பிரச்சாரம் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது என பஞ்சாயத்து தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 75சதவிகிம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.ஆனால்,50 சதவிகித மக்கள் மட்டுமே தங்கள் வீட்டில் கழிவறை வசதி கொண்டுள்ளனர். மேலும்,60 சதவிகித்தினர் திறந்தவெளியை கழிப்பிடங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.