புதிய வராலாறு படைத்தது இஸ்ரோ !!!

 இந்திய விண்வெளி ஆய்வுத்துறையான இஸ்ரோவின் புதிய மைல்கல்லாக ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி - சி37 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஏழு நாடுகளைச் சேர்ந்த 104 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து
இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற் கொள்ளை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்கு முன் 2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 33 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான் சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இதற்கு முன்2016 ம் ஆண்டு, ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி, புவி சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது தான் உச்சபட்ச சாதனையாக கருதப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...