எம்.எல்.ஏ.க்களை அப்புறப்படுத்த முயற்சி : நவநீத கிருஷ்ணன் எம்.பி!

அதிமுக சட்டமன்ற உறுபினர்கள் தங்கியுள்ள ரிசார்ட்டின் அதிபரை மிரட்டி எம்.எல்.ஏ.க்களை அப்புறப்படுத்த முயற்சி செய்வதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.



கூவத்தூர் விடுதியில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நவநீத கிருஷ்ணன் எம்.பி. கூறுகையில் , “144 தடை உத்தரவு பிறப்பித்து எங்களை வெளியேற்றச் முயற்சி செய்வது சட்டத்திற்கு புறம்பானது. காவல் துறை கட்டுப்பாடில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர். நாங்கள் அனைவரும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறோம். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று நாங்கள் எதிர்பார்கிறோம். ஆளுநர் ஆட்சியமைக்க எங்களை அழைக்கும் வரை நாங்கள் அனைவரும் இந்த விடுதியிலே தங்க முடிவு செய்துள்ளோம். ஆளுநர், சட்டப்படி ஆட்சியமைக்க எங்களை அழைக்காவிடில், சட்டப்பூர்வமாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்வோம். மேலும், எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தால் உண்ணாவிரதம் இருப்போம்” என்று கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...