கணினி என்பது தற்போது ஒரு மாபெரும் புரட்சியை சந்தித்து வருகிறது.

கணினி என்பது தற்போது ஒரு மாபெரும் புரட்சியை சந்தித்து வருகிறது. உலகின் அதிக பயனர்கள் பயன்படுத்தும் osகளில் mac மற்றும் விண்டோஸ் போன்றவை முக்கியமானவை. உலகின் பெரும்பான்மை மக்கள் இந்த
விண்டோஸ் பயன்படுத்தக் காரணம் அதன் எளிமை, அதற்கு பயன்படும் பல்வேறு சாப்ட்வேர்களை நாம் இலவசமாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்ளலாம். காலங்கள் மாறும் போது அதற்கு தகுந்த பல்வேறு விதமான புதிய அப்டேட்களை அவ்வப்போது இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு பயனர்கள் பலரும் கேம் விளையாட உதவியாக விண்டோஸ் xbox என்ற ஒன்றினை வெளியிட்டது. அதன் பின்னர் பலரும் தனக்கு தேவையான கேம்களை அதிலிருந்து பெற்ற வண்ணம் இருந்தனர். இருப்பினும் கேம்கள் விளையாடும் போது பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் காரணத்தால் பயனர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தனர். அதனால் தற்போது புதிய அப்டேட் ஒன்றினை விண்டோஸ் 10 இல் சேர்க்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டில் கேம் விளையாட game mode என்ற புதிய mode சேர்க்கப்படும் என்றும், இதனால் விளையாடும் பொழுது பிற ஆப்கள் தானாக close செய்யப்படும் என்றும், அதனால் எந்த வித தடையுமின்றி அனைவரும் கேம் விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பயனர்கள் அனைவரும் இந்த அப்டேட் செய்ய காத்திருக்கின்றனர். இதன் வெளியீடு விரைவாக வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...