வேலைவாய்ப்பு: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரெண்டீஸ் பயிற்சி மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 30

பணியின் தன்மை: அப்ரெண்டீஸ் பயிற்சி (20) மற்றும் ஆய்வக உதவியாளர் (10)

சம்பளம்: பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் ரூ.6,970 - 7,220 வழங்கப்படும்.

தகுதி: இயற்பியல், கணிதம், வேதியியல், தொழிலக வேதியியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம்: ஒன்றரை ஆண்டு.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iocl.com/download/AdvtAOCPDigboi03022017R.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து,

தலைமை மனிதவள மேலாளர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (AOD), திக்போய் – 786171 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசித் தேதி: 23.02.2017

மேலும் விவரங்களுக்கு https://www.iocl.com/download/AdvtAOCPDigboi03022017R.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...