வங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எந்த நேரத்திலும் நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு!!

புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவும், வங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எந்த நேரத்திலும் நீக்கப்படும் நிலை உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பணம் எடுக்க கட்டுப்பாடுகள்

ரூ.1,000, ரூ.500 ஆகிய உயர்மதிப்பு பண நோட்டுகளை செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக கடந்த நவம்பர் மாதம் 8–ந்தேதி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.


அதே நேரத்தில் பணம் எடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் அச்சிட்டு புழக்கத்துக்கு வர வர, கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.

வங்கி ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு கடந்த 30–ந்தேதி நீக்கப்பட்டது. அதே நேரத்தில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

எந்த நேரத்திலும் நீக்கம்

இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில், பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் சக்தி காந்ததாஸ், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பணம் எடுப்பதில், வாரம் ரூ.24 ஆயிரம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருந்து எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தவிர்த்து, பிற கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. இந்த ஒரு கட்டுப்பாடும் எந்த நேரத்திலும் நீக்கப்பட்டு விடும்.

வாரம் ரூ.24 ஆயிரம் என்ற விகிதத்தில் ஒரு சிலர் மட்டும்தான் மாதத்துக்கு ரூ.1 லட்சம் எடுக்கிறார்கள். எனவே நடைமுறையில் பார்த்தால், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில், ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அதைச் சரிக்கட்டும் வகையில், மறுபணமாக்கும் நடவடிக்கைகள் (புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது) கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக்காரணம், வாரம் ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு அமலில் இருப்பதுதான். இதுவும் எந்த நேரத்திலும் நீக்கப்பட்டு விடும்.

90 நாளில்...

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த 90 நாட்களுக்குள்ளேயே மறு பணமாக்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.

இது எந்த அளவுக்கு மறுபணமாக்கும் நடவடிக்கைகள் (விரைவாக) நடந்து முடிந்துள்ளன என்பதை காட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...