2015-இல் 70,000 குழந்தைகள் நீரிழிவால் பாதிப்பு: மத்திய அரசு!!!

கடந்த 2015-இல் நாட்டிலுள்ள 14 வயதுக்கு உள்பட்ட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
சர்வதேச நீரிழிவுக் கழகத்தின்
மதிப்பீட்டின்படி, கடந்த 2015-இல் நாட்டிலுள்ள 14 வயதுக்கு உள்பட்ட 70,200 குழந்தைகள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2014-இல் நீரிழிவால் பாதிக்கப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 6.68 கோடியாகும். 2011-இல் இந்த எண்ணிக்கை சுமார் 6.13 கோடியாகும்.
நாட்டில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு செய்து வருகிறது.
இதுவரை 15 மாநிலங்களில் ஆய்வு முடிந்துள்ளது. ஆய்வு முடிவுகளின்படி, நீரிழிவின் தாக்கம் மாநிலத்
துக்கு மாநிலம் வேறுபடுவது தெரிய வருகிறது.
பிகாரில் 4.3 சதவீதமாக உள்ள நோயின் தாக்கம், சண்டீகரில் 13.6 சதவீதமாக உள்ளது. அதேபோல், நீரிழிவின் தாக்கம் மிúஸாரமில் 5.8 சதவீதமும், திரிபுராவில் 14.6 சதவீதமும் உள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...