டி.ஜி.பி. , கமிஷனருடன் ஆளுநர் ஆலோசனை !

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்,
டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரிடம் மாநில நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் நிலவரம் குறித்தும் அங்கு என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பதை குறித்தும் ஆளுநர் விசாரணை செய்தார்.

மேலும், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவரை பெங்களூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சசிகலாவை பெங்களூர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...