தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த சத்தியமூர்த்தி பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, புதிய ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.
இவர் இதற்கு முன்பு காவல்துறையின் நலவாழ்வுப் பிரிவில் ஐ.ஜி.யாக பணிபுரிந்தார் .
கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தேவாசீர்வாதம் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார் . இவரை மாற்றித்தான் சத்தியமூர்த்தி அப்பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். தற்போது சத்தியமூர்த்தியை பணியிடமாற்றம் செய்து அந்த இடத்திற்கு தேவாசீர்வாதம் வந்துள்ளார்.
இந்நிலையில், உளவுத்துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் வந்ததன் பின்னணி விபரம் தெரியவந்துள்ளது. அதன் விபரம் வருமாறு,
உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி விடுப்பில் சென்றதையடுத்து, சட்டம் ஒழுங்கு மற்றும், உளவுத்துறை டி.ஜி.பி, டி.கே.ராஜேந்திரன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே முதல்வரிடம், காவல்துறையின் நலவாழ்வுப் பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை பரிந்துரை செய்துள்ளார். அதையடுத்து, முதல்வருடன் டிஜிபி நேற்று சந்தித்து பேசிய பின்னர் டேவிட்சன் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டேவிட்சன் 1995 பேட்ஜ், ஏ.எஸ்.பி,யாக கலவரபகுதியான பரமகுடியில் சிறப்பாக பணியாற்றி, கோவையில் இந்து, முஸ்லீம் கலவரத்தின்போது சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, 2000-2002இல் கடலூர் எஸ்.பி.யாக பொறுப்பேற்று பெரும் சாதிகலவரத்தை முறியடித்ததும் சிறப்பாகும். அதன்பின், 2002இல் உளவுத்துறையில் எஸ்.எஸ்.பி,யாக, பணிசெய்தார். 2006-2007இல். திமுக ஆட்சியில், அம்பத்தூரில் ராக்கெட் லாஞ்சர்கள் தயாரித்ததை கண்டுபிடித்து கைதும் செய்தார்.
கரும்புலி போட்டில் வெடிமருந்து இருந்ததை கண்டுபிடித்து,உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் சேட் ஆலோசனைபடி செயலிழக்க செய்தார்.
2007-2010 வரையில் மத்திய போதை தடுப்புப் பிரிவில் இவர் சிறப்பாக பணிபுரிந்ததையடுத்து, மீண்டும் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.