தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டிருக்கும் இடைப்பாடி பழனிச்சாமி, சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாலும், தன்னை கிட்டதட்ட இருபது நாட்களுக்கு அதிகமாக தூங்கவிடாமல் செய்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் சிக்கலில் ஆழ்த்த வேண்டும் என, சபதம் போட்டு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து விலகியதும், அதற்கு காரணமான சசிகலாவை ஒழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதற்காகத்தான், போயஸ் தோட்டத்தை அரசு, ஜெ., நினைவு இல்லமாக ஆக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை களைவதற்காக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அதே போல, கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த சரவணன் எம்.எல்.ஏ., தன்னை அ.தி.மு.க.,வின் அடைத்து வைத்திருப்பது குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்தான், தற்போது, சசிகலா மீதும் எடப்பாடி பழனிச்சாமி மீதும், தேனாம்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இப்படி நிறைய விஷயங்கள் சசிகலா தரப்புக்கு நெருக்கடிகளாகக் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது கடும் கோபத்தில் உள்ளார். அதனால், விரைவில், பன்னீர்செல்வம், குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மீது வரிசையாக வழக்குகள் போடப்படும். அதற்கான ஏற்பாடுகளில் கட்சியினரும், போலீசாரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.