ஐஎப்எஸ் தேர்வு முடிவு வெளியீடு !!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஐஎப்எஸ் தேர்வு (மெயின்) முடிவுகளை நேற்று வெளியிட்டது. இந்திய வன பணிக்கான (ஐஎப்எஸ்) தேர்வை தொடக்கநிலை, மெயின் மற்றும் இன்டர்வியூ ஆகிய பகுதிகளாக மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது. கடந்த நவம்பரில் மெயின் தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகளை

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நேற்று அறிவித்தது.

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மெயின் தேர்வில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு தனித்தன்மை தேர்வு வருகின்ற 27ம் தேதி டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நடத்தப்படும். இது குறித்த தகவல்கள் ஆணையத்தின் வலைதளமான www.upsc.gov.in. பதிவேற்றம் ெசய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அதனை பார்த்து விவரங்களை ெதரிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...