தண்டனையிலும் தமிழை வளர்க்கும் நீதிபதி !!

மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் இன்று வழங்கிய ஒரு நூதனமான தண்டனை அனைவரையும் வியந்து பார்க்க வைத்ததோடு தமிழர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.காரமடை காவல் நிலையத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் மீது ஒரு வழக்கு

பதியப்படுகிறது அவர்கள் மாணவர்கள் என்பதால் உடனடியாக பிணை வழங்கிய நடுவர், அந்த மாணவர்களுக்கு வழங்கிய நிபந்தனைகள் தான் இன்று முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது என்ன நிபந்தனைகள் தெரியுமா?*

*1.மூன்று மாணவர்களும் தினமும் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி தமிழாசிரியரிடம் 10 திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்.*

*2.பத்து நாட்களுக்கு 10 குறள் வீதம் மொத்தம் 100 திருக்குறள் ஒப்புவித்த பின்பு தலைமை ஆசிரியர் அவர்கள் நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டும்*

*மாணவர்களுக்கு உடனடியாக பிணையும் வழங்கி,தண்டனையிலும் தமிழை வளர்க்கும் நீதிபதி திரு.சுரேஷ்குமார் அவர்களுக்கு*
*பாராட்டுக்களும்!   வாழ்த்துகளும்!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...