பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் : முதல்வர் உறுதி !!

சென்னை துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற தமிழக முதல்வர் பழனிச்சாமி, நேற்று மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி வறட்சி நிவாரண நிதி, வர்தா புயல் நிவாரண
நிதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தார். அதையடுத்து, இன்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்துப் பேசியபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இந்தத் திட்டம் கடந்த 6 வருடங்களாக நிலுவையில் உள்ளது. இதை விரைந்து மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு செயல்படுத்தும். மேலும் இந்தத் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்தவும் அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மதுரவாயல் - துறைமுகம் இடையேயான பறக்கும் சாலைத் திட்டம் தமிழக பொதுப்பணித் துறையும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். இந்தத் திட்டம் முதலில் கூவம் ஆற்றின் கரைகளில் தூண்களை எழுப்பிச் செயல்படுத்தப்படும் என்றுதான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்த நிறுவனம் ஆற்றின் நடுவே தூண்களை எழுப்பி திட்டத்தைச் செயல்படுத்தியது. நீர்வளத்தைப் பாதிக்கக்கூடிய இந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுதொடர்பான வழக்கு முதலில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கேற்ப இந்தத் திட்டம் விரைவில் செயல்படவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...