அரசு பஸ்களில் இலவச ‘வை-பை’ வசதி !!

மராட்டிய மாநிலத்தில் மராட்டிய அரசும், மராட்டிய மின் நிறுவனமும் சேர்ந்து பஸ் போக்குவரத்தை இயக்கி வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் பஸ்சில் செய்யப்படும் வசதிகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது அரசு பஸ்களில் பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது என்று முடிவு செய்தனர்.


இதன்படி பஸ்களில் இலவச வை-பை வசதி செய்வது என்று முடிவு எடுத்தனர்.

இதன் மூலம் அனைத்து பஸ்களிலும் நவம்பர் மாதம் முதல் வை-பை வசதி ஏற்படுத்தப்படும்.

பஸ்சில் பயணம் செய்பவர்கள் 20 எம்.பி. அளவுக்கு மட்டும் வை-பை வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுபோல் பஸ்சில் சினிமா பாடல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது என்றும் முடிவு செய்தனர்.


இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு தனியார் டெலிபோன் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பஸ்களிலும் சி.பி.எஸ். கருவி பொருத்தவும் முடிவு செய்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...