ஒரே அலைபேசி நோய் தொற்று ஏற்படும்; முன்னெச்சரிக்கை தேவை!!

 ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நோய் தொற்று:

லோக்சபாவில் நேற்று, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர், பாகன் சிங் குலோஸ்தே கூறியதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2015ல், அலைபேசி தொற்று தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது; இதில், ஒரே அலைபேசியை பலர்
பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

81% வாய்ப்பு:

குறிப்பாக மருத்துவமனைகளில், ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்தும் போது, 81 சதவீதம் அளவிற்கு நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. எனவே, அலைபேசியை பயன்படுத்தும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...