மக்கள் நலனை விட்டுக்கொடுக்காதீர்: ஜவாஹிருல்லா !!

தமிழக மக்களின் நலன்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத வகையில் தங்களின் தலைமையிலான அரசு இருக்கும் என நம்புகின்றேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், ''தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சி, காவிரிப் பிரச்னை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை, விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பஞ்சம், மீனவர் வாழ்வாதாரம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கும் சவாலான சூழ்நிலையில் தமிழகத்தில் தங்களது தலைமையிலான அரசு அமைந்திருக்கிறது.

தங்கள் தலைமையிலான புதிய அரசு இச்சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையிலும், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் தங்கள் அரசு செயல்படும் என்று நம்புகிறேன். சிறுபான்மையின மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும், தமிழக மக்களின் நலன்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத வகையில் தங்களின் தலைமையிலான அரசு இருக்கும் என்றும் நம்புகின்றேன்'' என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...