தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை : உச்ச நீதிமன்றம் !!

நாடு முழுவதுமுள்ள சாலை மற்றும் நடைபாதைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி டெல்லியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் தனேஷ் லேஷ்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது வழக்கு
தொடர்ந்த தனேஷிடம், “நீங்கள் தேர்தலில் வாக்களித்ததுண்டா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தனேஷ், ‘நேர்மையாக சொல்லவேண்டும் என்றால், நான் வாழ்க்கையில் இதுவரை வாக்களித்ததே இல்லை’ எனக் கூறி நீதிபதிகளுக்கு அதிர்ச்சியளித்தார்.

தனேஷின் பதிலைக்கேட்டு திகைத்த நீதிபதிகள், “நீங்கள் இதுவரை வாக்களித்ததே இல்லை, அதனால் நீங்கள் அரசாங்கத்தை விமர்சிக்கவும், கேள்வி கேட்கவும் தகுதியற்றவர்” என கூறினர். மேலும் இந்த வழக்கில் மற்ற மாநிலங்களும் சம்மந்தப் பட்டிருப்பதால் ஒரே தீர்ப்பின் மூலம் நாடு முழுவதுமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது.என்றும் தீர்ப்பளித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...