சசிகலாவிற்கு சலுகையா: மறுக்கும் சிறைத்துறை !

சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்றும், மற்ற கைதிகளைப்போலவே அவரும் நடத்தப்படுவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி எச்.என்.சத்திய நாராயணா கூறினார்.



பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையின் முதல் மாடியில் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சிறையில் இருக்கும் கைதிகளுக்குப்போன்ற சாதாரண அறை தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மின் விசிறி மற்றும் மேஜை கிடையாது. இருவருக்கும் கம்பளி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு பேருக்கும் கம்பளி, தட்டு, டம்ளர் மற்றும் கைதி சீருடை வழங்கப்பட்டுள்ளது. புளு கலரில் பார்டர்போட்ட வெள்ளை சேலையை இருவரும் அணிந்து உள்ளனர். இவர்கள் இருவரும் தாங்கள் விருப்பப்பட்டால் சிறையில் வேலை பார்க்கலாம். ஆனால் கட்டாயம் கிடையாது.

இதைத்தவிர சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்றும் அவரும் மற்ற கைதிகளைப்போல நடத்தப்படுவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி எச்.என்.சத்திய நாராயணா கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...