பணப்புழக்கம் ரூ. 11.73 லட்சம் கோடியாக குறைவு!!

இந்தியாவில் பணப்புழக்கம் ரூ.11.73 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக, நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தெரிவித்துள்ளார்.



        கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிவில் நாட்டில் ரூ.16.41 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. ரூபாய் நோட்டு வாபஸ்  நடவடிக்கையால், பணப்புழக்கம் குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிவில் நாட்டில் ரூ12.82 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிவில் பணப்புழக்கம் ரூ.14.28 லட்சம் கோடியாக இருந்தது.

முக்கியமாக, 'தற்போது 1.9 பில்லியன் மதிப்பில் 5 ரூபாய் நாணயங்களும், 1.3 பில்லியன் மதிப்பில் 10 ரூபாய் நாணயங்களும், 2.6 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகளும், 3.6 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளது' என அர்ஜுன் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...