தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக இருந்த சபிதா ஐ.ஏ.எஸ் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அந்தத் துறையில் இருந்து அரசு சிமெண்ட் கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். இது, தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. சபிதாவை
மாற்றி ஒரு வாரம் ஆகியும் இது குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநரக அலுவலகங்களில் சபிதாவை மாற்றியபோது சுவீட்ஸ் கொடுத்து கொண்டாட துவங்கியவர்கள், இன்னும் விதவிதமான பார்ட்டி, கொண்டாட்டங்களிலிருந்து மீளவில்லை.
ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு ஒரு அதிகாரியை மாற்றுவது அரசு நிர்வாகத்தில் சகஜம்தான். ஆனால் சபிதாவின் இட மாறுதல் மட்டும் ஏன் இவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருக்கிறது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“1988 வருட பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஊட்டி கான்வென்ட்டில் படித்து வளர்ந்ததால் நல்ல செல்லம். கல்லூரி படித்து முடித்ததும் பொறியாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். பிறகு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தார். பிறகு ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
1991-96ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தார்.
அப்போது சபிதாவுடன் பணியாற்றிய மூத்த அதிகாரிகளுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
அதோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் பார்வைக்கு ஏற்ப பணியினை செய்து முடித்ததால் ஜெ.வின் குட் புக்கில் இடம் பிடித்தார். எந்த ஒரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு ஐடியாக்களை கொண்டு வந்தததோடு அரசு சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் முக்கியமான இடத்தில் சபிதா இருந்தார்.
இதற்கு காரணம், வெளிநாட்டில் தான் படித்த அரசு மற்றும் பொது நிர்வாக படிப்பு பெரும் உதவியாக இருப்பதாக அவரது சக அதிகாரிகளிடம் அடிக்கடி பெருமையாக சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன் பிறகு ஜெ.வின் ஆட்சி மாறியதும் பல்வேறு இடங்களுக்கு சபிதா மாறினார்.
மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக் கல்வித்துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பள்ளிக் கல்வித்துறையை பொருத்தவரை ஆசிரியர்கள் மாறுதல், புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, பாடநூல்கள் வாங்குவது முதல் பல்வேறு பொருட்கள் கொள்முதல் செய்வது, அதிக பணம் மழை கொட்டும் ஏரியா என்பதால் பல்வேறு அரசியல் வாதிகள் இந்தத்துறைக்கு ஆர்வமாக வருவார்கள்.
ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் இருந்து கோலோட்சியிருக்கிறார் சபிதா.
பள்ளிக்கல்வித்துறையை பொருத்தவரை சபிதா வைத்ததுதான் சட்டம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கூட தலையிட முடியாமல் அத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
சிவபதி முதல் பெஞ்சமின் வரை ஆறு அமைச்சர்களை ஐந்து வருடங்களில் மாற்றினார் என்பது போன்ற பல்வேறு சர்ச்சையான பேச்சுகள் அவர் மீது வந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அவர் அதுகுறித்து ஒரு நாளும் வருத்தப்படவில்லை. அவரது போக்கையும் மாற்றவில்லை. முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், முதல்வரின் செயலாளர்களாக இருந்த வெங்கட்ராமன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்பட அங்கிருக்கும் முக்கியமான அதிகாரிகளுடன் மிகவும் நெருங்கிய நட்பில் இருந்துகொண்டு அமைச்சர்களை பந்தாடினார். சில அமைச்சர்கள் சபிதாவை மாற்ற நினைத்து அவர்களது பதவியை இழந்த சம்பவமும் நடந்தது” என்றனர்.
இதுகுறித்து சபிதாவிடம் பேசினோம். “முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமைச்சர்களை நான் மாற்றவில்லை. ஒரு அதிகாரியாக இருந்து கொண்டு என்னால் அப்படி செய்ய முடியாது. அப்படி பேசுவது எல்லாம் தவறு. நான் மத்திய அரசு பணிக்கும் செல்லவில்லை. எனக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்யப் போகிறேன்” என்று நான்கு வார்த்தைகளில் அவரது பதிலை சொல்லிவிட்டு “மேலும் இது குறித்து நான் பேச விரும்பவில்லை” என்றார்.
ஜெ.வை அனைவரும் பவ்வியமாக குனிந்து கும்பிடு போட்டு வந்த நிலையில் சபிதா மட்டும் செல்லமாக ‘ஆன்ட்டி’ என்று அழைத்து வந்தாக இன்னும் வெளியே பேச்சுகள் நிற்காமல் ஓடுகிறது.
ஜெ - சபிதா குறித்த இது போன்ற வெளியுலக பேச்சுக்களை சபிதா விரும்புகிறாரா? இல்லையா? என்பதை சபிதாதான் முடிவு செய்ய வேண்டும்.