மத சகிப்பின்மையை ஊக்குவித்ததாக புகார்: மேற்கு வங்காளத்தில் 125 பள்ளிகளுக்கு நோட்டீஸ்!!!

மத சகிப்பின்மையை ஊக்குவிப்பதாக கூறி மேற்குவங்காளத்தில் உள்ள 125 பள்ளிகளுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இவற்றில் 96 பள்ளிகள் அரசு சான்றிதழ்கள் பெறவில்லை எனவும் மேற்கு வங்காள மாநில கல்வி மந்திரி பார்தா சட்டர்ஜி தெரிவித்தார்.


அவர் மேலும் கூறும் போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணையதளத்தில் மேற்குவங்காளத்தில் 300 பள்ளிகளில் அதன் செயல்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 125 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த பள்ளிகளில் கற்பிக்கப்பட்டால் அவை நிறுத்தப்படும்” என்றார்.

பாரதீய ஜனதா கட்சியின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொடர்புடைய தனியார் தொண்டு நிறுவனத்தால் மேற்கூறப்பட்ட பள்ளிகள் நடத்தபடுவதாக மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ்  கட்சி குற்றம் சாட்டியுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...